St. Josephs Church, Molasur logo St. Josephs Church, Molasur

St. Josephs Church, Molasur

by BOSCO SOFT TECHNOLOGIES FZE

🗂️ Communication

🆓 free

4.9/5 ( 709+ reviews)
Android application St. Joseph's Church, Molasur screenshort

Features St. Josephs Church, Molasur

.
பள்ள மொளச்சூரில் கூட்டுக் குடும்பங்களாய் வசித்து வந்த நம் முன்னோர் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது 1890 களில் தற்பொழுது நாம் குடியிருக்கும் மேட்டுப்பாங்கான இடத்திற்கு (மொளச்சூருக்கு) வந்து குடியேறினார்கள்“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்” “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற பழமொழிகளுக்கு ஏற்ப தற்பொழுது நமது பங்கு ஆலய கொடி மரம் உள்ள இடத்தில் சீமை ஓடுகளால் வேயப்பட்ட சிற்றாலயம் ஒன்றை இங்கு குடியேறிய உடனே எழுப்பினார்கள்.மொளச்சூர்இ பண்ணூர் பங்கின் கிளைப் பங்காய் இருந்தது.நாளடைவில் குடும்பங்கள் பெருகவே செபவழிபாட்டிற்கு சிற்றாலய இடம் போதாமையால் சற்றுப் பெரிய ஆலயம் கட்டி எழுப்பவேண்டும் என்று ஊர் மக்கள் பங்குத்தந்தையரை வற்புறத்தத் தொடங்கினார்கள்.1934 லிருந்து 1940 வரை பண்ணூர் பங்குத் தந்தையாக இருந்த அருள்திரு.
இராயன்னா அடிகளாரும் 1940லிருந்து 1954 வரை பண்ணூர் பங்குத்தந்தையாக இருந்த அருள்திரு.
ளு.இருதயசாமி அடிகளாரும் தங்களது கிளைப்பங்கான மொளச்சூரில் நல்லதொரு ஆலயம் கட்டி எழுப்ப எடுத்த முயற்சிகளின் பலனாலும்இ மொளச்சூர் இறை மக்களின் ஒருமித்த ஆதரவாலும்இ உழைப்பாலும் 1940-ம் ஆண்டு ஜூலைத்திங்கள் 28-ம் நாள் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ்வாலயமும் சீமை ஓடுகள் கொண்டு வேயப்பட்டதெனினும் சிலுவை வடிவில் சற்று பெரிய ஆலயமாக மத்தியில் கும்ப வடிவத்துடம் கட்டப்பட்டது.
நன்மை வாங்கும் பொழுது இறைமக்கள் முழந்தாளிட ஏதுவாக பலிபீடமேடையில் கிராதியும்இ அதன் இடப்புறத்தில் பிரசங்க மேடையும் எழுப்பப்பட்டது.
புலிபீடமேடையைச் சார்ந்த பின்புறச் சுவரை ஒட்டி எழுப்பப்பட்ட பலிபீடத்தின் நடுவில் நற்கருணை பேழை அமைக்கப்பட்டது.  அதன் மேற்புறம் பாடுபட்ட சிலுவை வைக்கப்பட்டிருந்தது.
நற்கருணை பேழையின் இருபறமும் பித்தளையால் செய்யப்பட்ட மெழுகுவர்த்தி தண்டுகளும்இ பித்தளையால் செய்யப்பட்ட மலர்ச் சாடிகளும் வைக்க படிக்கட்டுகளைப் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.அவ்வாலயம் அடித்தளம் இடப்பட்ட நாளின் பவளவிழாவினை சிறப்பான விதத்திலே கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம்இ அவ்வாலயம் நம் ஊர் இறை மக்களின் வாழ்வினை மையமாகஇ விசுவாசத்தின் ஊற்றாக எவ்வாறெல்லாம் இருந்தது என்பதை ஓரளவிற்காகவாவது அறிந்து கொள்வது நம் கடமை.
குடும்பமே ஒரு கோயில் என்பார்கள்.
ஆயின் ஊரெ ஃ உலகமே ஒரு குடும்பமாய் நிலைக்க கருணை பொழியும் உயிருள்ள கடவுளின் உறைவிடமாய் இருப்பதே ஆலயம் என்பது நம் முன்னோரின் நம்பிக்கை.
எனவே ஆண்டவரின் வீடு என ஆலயத்தைப் போற்றினார்கள்.ஆதலால்தான் கோயில் வளாகத்தில் செங்கல் சூளை எழுப்பவும் ; சுண்ணாம்பு காரைஇ சாந்து இவற்றைத் தயாரிக்க உருளையை இழுக்கவும் வேலை செய்ய வீட்டிற்கு ஒருவர் என ஆளனுப்பினார்கள்.வாலாசாபாத் (சீவரம்) அருகில் ஓடும் பாலாற்றிலிருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் ஓட்டினார்கள்.
ஆலய கட்டுமான பணிகளுக்கு தங்கள் வீடுகளிலிருந்து ஆளனுப்பி உதவினார்கள்.
பொருளுதவியும் புரிந்தார்கள்.
இவ்வாறு பங்குத் தந்தையரோடு ஊர் மக்கள் ஒத்துழைத்ததால் விரைவில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.மொளச்சூர் ஒரு கிளைப்பங்காய் இருந்தாலும்இ பல்வேறு கினைப் பங்குகள்இ பண்ணூர் பங்குத் தந்தையின் பொறுப்பில் இருந்தாலும்இ ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி மட்டுமே ஆலயத்தில் நடைபெற்று வந்தது.ஒவ்வொரு சனிக்கிழமை மாலை இ வாரத்திற்கு ஒரு குடும்பத்தினர் தங்களது ஒரு ஜோடி எருதுகளைக் கொண்டு வந்து ஆலய வளாகத்தினுள் இருக்கும் கூடு வண்டியில் பூட்டி பண்ணூர் பங்குத்தந்தையின் இல்லத்திற்கு ஓட்டிச்சென்று பங்குத் தந்தையை மொளச்சுர் ஆலயத்திற்கு அழைத்து வருவர்.
சனிக்கிழமை மாலை பங்குத் தந்தை பாவசங்கீர்த்தனம் கேட்பார்.இரவு ஆலய வளாகத்தில் அவரது இல்லத்தில் தங்கி மறுநாள் ஞாயிறு காலை 6 மணி திருப்பலி நிறைவேற்றிவிட்டு உடனே பண்ணூருக்கு கூடு வண்டியில் சென்று விடுவார்.

Secure & Private

Your data is protected with industry-leading security protocols.

24/7 Support

Our dedicated support team is always ready to help you.

Personalization

Customize the app to match your preferences and workflow.

Screenshots

See the St. Josephs Church, Molasur in Action

St. Josephs Church, Molasur Screen 1
St. Josephs Church, Molasur Screen 2
St. Josephs Church, Molasur Screen 3
St. Josephs Church, Molasur Screen 4

Get the App Today

Download on Google Play

Available for Android 8.0 and above